உறையூரில் வீடு புகுந்து 4 பவுன் நகைகள் திருட்டு

உறையூரில் வீடு புகுந்து 4 பவுன் நகைகள் திருட்டு
X

திருட்டு 

திருச்சி உறையூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்
திருச்சி உறையூா் ராமலிங்க நகா் 5 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (31), தனியாா் நிறுவன மேலாளா். இவா் செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வீட்டுக்கு வெளியே உள்ள மேஜையில் வைத்துச் சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா்கள் அந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ. 28 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story