தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் 4 மாணவர்கள் தேர்ச்சி

தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் 4 மாணவர்கள் தேர்ச்சி

பாராட்டு விழா 

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 3-ந் தேதி நடத்திய தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் மாணவர்கள் பங்கேற்றனர்.

இத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 600 அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் சுமார் 4 ஆயிரத்து 300 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 170 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் 15 வது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது. அதன்படி செய்யார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 17 பேர் தேர்வு எழுதி பவன், மௌசிக், சர்வேஸ்வரன், யோகபிரகாஷ் ஆகிய 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் விஜயசாமூண்டீஸ்வரி, ஸ்டெல்லா, உஷாராணி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் அசோக், பள்ளி மேலாண்மை குழு தலைவி உமாமகேஸ்வரி, பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு தலைவர் ரமேஷ், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் பாபு உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர்.

இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1000 மாதந்தோறும் என 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.48 ஆயிரம் வழங்குகிறது

Tags

Next Story