வாகன கொள்ளையர்கள் 4 பேர் கைது - பைக்குகள் பறிமுதல் 

வாகன கொள்ளையர்கள் 4 பேர் கைது - பைக்குகள் பறிமுதல் 
பைக் திருட்டில் கைதான 4 பேர்
கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை, குலசேகரம் திருவட்டார் கொற்றிக்கோடு உள்ளிட்ட பல போலீஸ் எல்லை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக போலீசருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட எஸ் பி உத்தரவின் பேரில், தனிப்பட்டை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருவட்டாறு அருவிக்கரை பகுதி சேர்ந்த விஜின் (25) என்பவர் இருசக்கர வாகனத்தை வாகனத்தை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் ஆற்றூர் பகுதியை சேர்ந்த அஜித் (18), அன்னியோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (18), பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் ராஜன் (28) ஆகியோரும் இந்த வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான நான்கு பேரிடமிருந்து 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story