40 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் டவர் இல்லாமல் தவித்து வருவதாக தேனி மாவட்ட நீதிபதியிடம் கோரிக்கை வைத்த குரங்கணி கிராம மலைவாழ் மக்கள்

மலைவாழ் மக்கள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டக்குடி ஊராட்சி குரங்கணியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக சட்டப் பள்ளி மாணவர்கள் மற்றும் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மலைப்பகுதிகளில் வாழும் பொது மக்களின் கோரிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு தேவைப்படும் சட்ட ஆலோசனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் மாவட்ட நீதிபதியுமான பரமேஸ்வரி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தவர்களில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பது குறித்தும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்தார் பின்னர் கிராம மக்கள் தாங்கள் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் டவர் கிடைப்பதால் அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக மாவட்ட நீதிபதியிடம் தங்களது தேவைகள் குறித்து தெரிவித்தனர் பின்னர் மலைவாழ் மக்களின் கோரிக்கையை கேட்டுக் கொண்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நீதிபதி பரமேஸ்வரி தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் சட்டக் கல்லூரி பேராசிரியர் கிஷோர் சங்கர் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அவசர உதவி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்
Next Story