40 ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லை கிராம மக்கள் போராட்டம்

40 ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லை கிராம மக்கள் போராட்டம்
X
விரைந்து வந்த அரசு அதிகாரிகள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அம்மாள் காலணி பகுதியில் 40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் தங்களின் அரசு அடையாள அட்டைகளான ரேஷன் கார்டு ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள அம்மாள் நகர் பகுதியில் 70 க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 40 ஆண்டு காலமாக சாலை வசதியின்றி தவித்து வருகின்றனர். சாலை வசதி அமைக்க 3 நில உரிமையாளர்களிடம் 3 செண்ட் நிலம் பெற்று சாலை அமைக்ககோரி கடந்த பதினைந்து வருடமாக போராடி வருகின்றனர். நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களை சந்தித்து சாலை வசதி அமைத்து தர கோரினர். அவரின் பரிந்துரை பேரில் கோத்தகிரி வட்டாச்சியர் கோமதி அவர்கள் தலைமையில் குழு அமைத்து தீர்வு காண சொன்னார்.வட்டாச்சியர் குழு அமைத்தும் தீர்வு காண முடியாமல், ஆதிதிராவிடர் காலனிக்கு வழி அமைக்க 3 நிலதாரர் மறுப்பதால் கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் நில எடுக்க அனுமதி கேட்டு குன்னூர் கோட்டாச்சியர் அவர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்தார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தியும் எந்த வகையிலும் உதவ முன் வர மாவட்ட நிர்வாகம் தயாராக இல்லை எனக்கூறி அரசு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியருக்கு தபால் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story