40 சதவீதம் நிறைவடைந்துள்ள அவசர சிகிச்சை வார்டு பணி

40 சதவீதம் நிறைவடைந்துள்ள அவசர சிகிச்சை வார்டு பணி
X
வாலாஜாபாதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு வார்டு கட்டிடம் கட்டுவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு, 500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். 60 படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில், தினமும், 20 பேர் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. இதனால், அம்மாதிரியான பாதிப்புகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், கால விரயம் ஏற்படுவதோடு நோயாளிகள் உயிர் இழக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவற்றை தடுக்க, வாலாஜாபாதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு வார்டு ஏற்படுத்த தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ், 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி, கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டு தற்போது 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு துவக்கப்பட உள்ளது. இம்மருத்துவமனையில் 'சிடி' ஸ்கேன், செயற்கை சுவாச கருவி, எக்ஸ்-ரே, ஸ்கேன் கருவி மற்றும் கூடுதல் மருத்துவர், உதவியாளர்கள் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story