40 நிமிடம் சாலை நடுவே மது போதையில் ரகலையில் ஈடுபட்ட இளைஞர்கள்

40 நிமிடம் சாலை நடுவே மது போதையில் ரகலையில் ஈடுபட்ட இளைஞர்கள்
திருத்தணியில் ஆந்திர மாநிலத்திற்கு சென்ற தனியார் பயணிகள் பேருந்து மது போதையில் சாலை நடுவே நிற்க வைத்து ரகலையில் ஈடுபட்டு ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள் 40 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது விரைந்து வந்த போலீஸ் தப்பி சென்ற போதை இளைஞர்களை தட்டி தூக்கினார்கள் அவர்கள் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பைபாஸ் ரவுண்டானா பகுதியில் ஆந்திராவிற்கு சென்ற தனியார் பயணிகள் பேருந்தை நிற்க வைத்து மோட்டார் சைக்கிளை அதன் முன்பு நிறுத்த வைத்து மது போதையில் வந்த இளைஞர்கள் ரகலையில் ஈடுபட்டனர், பேருந்து ஓட்டுனரை கடுமையாக எச்சரித்த மது போதை இளைஞர்கள் இதனால் திருப்பதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சித்தூர், ஆகிய வழியாக செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் சாலை நடுவே நின்றதால் 40 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பஸ் பேருந்து ஓட்டுனரை எச்சரிக்கை செய்துவிட்டு மது போதை இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர் இவர்களை சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று மது போதை இளைஞர்களை பிடித்தனர் போலீஸ் பாணியில் கவனித்து விட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறீர்களா என்று அவர்களை தட்டி தூக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் அவர்கள் எடுத்து வந்த இரண்டு விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர் போலீசார் இந்த மது போதை இளைஞர்களால் இந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு மற்றும் பொதுமக்களுக்கு கடும் இடையூறும் ஏற்பட்டது.
Next Story