40 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

X
போக்சோ பிரிவின் கீழ் 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் மேலும் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், என மொத்தம் 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் 1,00,000 ரூபாய் அபராதம் என தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும்
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 40 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி மகன் சுரேஷ்குமார் (33) இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் தொந்தரவு கொடுத்து, கற்பழிப்பு செய்ததாக, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சுரேஷ்குமார், கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று நீதிமன்ற விசாரணையில் இருந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுரேஷ்குமார், குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் குற்றவாளி சிறுமியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்கு போக்சோ பிரிவின் கீழ் 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் மேலும் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், என மொத்தம் 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் 1,00,000 ரூபாய் அபராதம் என தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று, மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போக்சோ குற்றவாளியான சுரேஷ் குமாரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Next Story

