40 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருச்செங்கோடு அருகே உள்ள ஒடுவம்பாளையம் பகுதியில் ஆடிட்டர் சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருச்செங்கோடு கைலாசம் பாளையத்தை அடுத்துள்ள ஒடுவம்பாளையம் பகுதியில் ஆடிட்டர் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப் படாத நிலையில் ஒரு கிணறு உள்ளது இன்று காலை தோட்டத்து பக்கம்அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் வந்தபோது ஏதோ சத்தம் கேட்கவே கிணற்றை எட்டிப் பார்த்தபோது ஒரு புள்ளிமான் கிணற்றுக்குள் படுத்திருப்பதும் கத்திக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.இதுகுறித்துஊர் பொதுமக்களிடம் தெரிவிக்க அவர்கள் தீயணைப்பு துறையிடம் தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் விரைந்து வந்ததீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மானை பாதுகாப்பாக மீட்டு குப்பாண்டம்பாளையம் பள்ளி வளாகத்தில் வைத்திருந்தனர் மேலும் பிடிபட்ட மான்குறித்து நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் தெரிந்த வனத்துறையினர் வந்து மானை மீட்டுச் சென்றனர் கிணற்றுக்குள் விழுந்த மானுக்கு காலில் லேசாக அடிபட்டிருந்தது மான் எங்கிருந்து வந்தது எப்படி வந்ததுதெரியவில்லை.
Next Story