வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு
விழிப்புணர்வு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் எஸ் கணேசன் லிங்கம் கூறியது தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன .இதில் வனத்துறை மூலம் நேரடியாக இரண்டு லட்சம் மரக்கன்றுகளும் ஊரக வளர்ச்சி துறை மூலம் 15 லட்சம் மரக்கன்றுகளும் வேளாண் துறை மூலம் இரண்டு லட்சம் மரக்கன்றுகளும் வருவாய்த்துறை மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் வனப்பகுதியில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நாலு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்றார்