விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 40 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 40 பேர் கைது
மாவட்ட எஸ்.பி அலுவலகம் 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 15 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4 கிலோ புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு 4 பெட்டிக்கடைகளை பூட்டி சீல் வைத்தனர்,

இதனை தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த திண்டிவனம் சாரத்தை சேர்ந்த பாபு (வயது 41), கண்டாச் சிபுரம் அருகே ஆயந்தூரை சேர்ந்த சுரேஷ் (41), வானூர் எடையஞ்சாவடியை சேர்ந்த சசிக்குமார் (47), வெள்ளிமேடுபேட்டை சீனி வாசன் (60), திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (38), திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் பகு தியை சேர்ந்த அறிவுமணி (41), மரக்காணம் கூனிமேடு ரவி (46), பாலாஜி (24), மணிகண்டன் (42), விக்கிரவாண்டி அருகே எசாலத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (40), விழுப்புரம் கே.கே.சாலை சதாம்உசேன் (27), சாலாமேடு பரமசிவம் (72) உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடமிருந்து மொத்தம் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் திண்டிவனம், கோட்டக்குப்பம் பகுதிகளில் 5 பெட்டிக்கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

Tags

Next Story