400 கிலோ கஞ்சா பறிமுதல் காவல்துறை விசாரணை.

X

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் 400 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 3 சொகுசு கார்களில் கடத்திவரப்பட்ட 400 கிலோ கஞ்சாவினை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பின் தொடர்ந்து வந்து திருவாரூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். போதை பொருட்களை கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story