பைங்காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி மோதி விவசாயி பலி
லாரி மோதி விவசாயி பலி
பைங்காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி மோதி விவசாயி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலபுத்தூரைச்சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் ஷங்கர் விவசாயி. பைங்காட்டூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது வயலில் விவசாயம் செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வந்தபோது அங்கு நெல் முட்டைகளை ஏற்ற வந்த லாரி ஷங்கர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அதே இடத்தில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story