400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி
திண்டுக்கல் அருகே கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவலர்கள் சின்னாளப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செட்டியபட்டி வாட்டர் டேங்க் அருகே 10 பைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு அதனை பறிமுதல் செய்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த நாகராஜ்(50) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags
Next Story