நாட்டுக்கோழியை பெற்றுச் சென்ற 400 பெண்கள்

ஒரத்தநாடு அருகே ஐசிஐசிஐ அறக்கட்டளை சார்பில் 400 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நாட்டுக்கோழி வழங்கல்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில், ஐசிஐசிஐ பவுண்டேஷன் நலிவடைந்தோர் மற்றும் விதவைகள் நிலமற்ற பெண்களுக்கு நாட்டுக் கோழி வழங்கும் நிகழ்ச்சி ஐசிஐசிஐ அறக்கட்டளை கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டம் மூலம் நடைபெற்றது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள், நிலமற்ற பெண்கள், மற்றும் விதவைகளுக்கு வாழ்வாதார நலனுக்காக, ஒரத்தநாடு பகுதியில், 11 ஊராட்சியைச் சேர்ந்த 400 பயனாளிகளுக்கு, தலா 10 நாட்டுக் கோழிகள் வீதம் மொத்தம் 4,000 நாட்டுக் கோழிகள் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. ஒக்கநாடு கீழையூரில் நடைபெற்ற, இந்நிகழ்வில், வளர்ச்சி அலுவலர் நவராஜா, ஐசிஐசிஐ பவுண்டேஷன் திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார். ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வன்னிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர்.கணேசமூர்த்தி, கோழிகள் பராமரிப்பு மற்றும் தீவனம், நோய் மேலான்மை பற்றி பயனாளிகளுக்கு விளக்கினார். நிறைவாக ஐசிஐசிஐ பவுண்டேசன் களப்பணியாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story