மக்கள் குறைதீர்க்கும் நாள் - 405 கோரிக்கை மனுக்கள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் - 405 கோரிக்கை மனுக்கள்

மக்கள் குறைதீர்க்கும் நாளில் 405 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 405 கோரிக்கை மனுக்கள்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (11.12.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 405 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 405 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.6,840/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000/- மதிப்பிலான தையல் இயந்திரம் 20 நபர்களுக்கும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.1.54 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் கொடி நாளினை முன்னிட்டு அதிக வசூல் செய்த 6 அலுவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

Tags

Next Story