டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 4063 பேர் தேர்வு ஆப்சென்ட் !

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 4063 பேர் தேர்வு ஆப்சென்ட் !

குரூப் 1 தேர்வு

சேலத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 4063 பேர் தேர்வு ஆப்சென்ட் கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வு இன்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 47 தேர்வு கூடங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் 13 ஆயிரத்து 469 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 9,406 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர்.

4063 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதனிடையே தேர்வு மையங்களில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடை தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியில் 47 அரை கண்காணிப்பாளர்கள், 47 தலைமை கண்காணிப்பாளர்கள், நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், நான்கு பறக்கும் படைகள், 12 கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டனர். இத்தேர்விற்காக தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சிரமமின்றி வந்து செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

Tags

Next Story