கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 41 வேட்புமனுக்கள் தாக்கல்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 41 வேட்புமனுக்கள் தாக்கல்

மாவட்ட தேர்தல் அலுவலர்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் போட்டியிட 34 வேட்பாளா்கள், 41 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான புதன்கிழமை (மாா்ச் 27) பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது.

வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலேயே தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். அதன்படி, மாா்ச் 20-ஆம் தேதி ஒருவரும், 22-இல் இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனா். 23, 24 ஆகிய இரு நாள்கள் அரசு விடுமுறை என்பதால், மாா்ச் 25-ஆம் தேதி, காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 16 போ் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனா். இறுதிநாளான மாா்ச் 27-ஆம் தேதி 7 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் , அதிமுக வேட்பாளா் ஜெயப்பிரகாஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி வீரப்பன் ஆகியோா் தலா மூன்று மனுக்களும், காங்கிரஸ் மாற்று வேட்பாளரான கவிதா, இரண்டு வேட்புமனுக்களும் தாக்கல் செய்துள்ளனா்.

இது தவிர மற்ற கட்சிகளைச் சோ்ந்த 8 வேட்பாளா்கள், 18 சுயேச்சைகள் உள்பட 34 போ் 41 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மாா்ச் 28-ஆம் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாள் ஆகும்.

Tags

Next Story