ரூ.41.12 கோடி மதிப்பில் பணிகள் திறந்து வைப்பு

ரூ.41.12 கோடி மதிப்பில் பணிகள் திறந்து வைப்பு
X
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.41.12 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வணிக வளாகம் அமைந்துள்ள திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் முஜிப்புரகுமான், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் சுவேதா, கீரனுார் பேரூராட்சித் தலைவர் கருப்புச்சாமி, துணைத்தலைவர் அப்துல்சுப்பு, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story