414 வது நாளாக மதிய உணவு வழங்கும் சமூக ஆர்வலர்.

மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரம் நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவருடன் இருக்கும் காப்பாளர்களுக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக தினமும் 1000 பேருக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் 414-வது நாளான இன்று (27/04/2025) ஞாயிற்றுக்கிழமை அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களின் தலைமையில், தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி., மாநில ஆணைய உறுப்பினர் ஆனந்தராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவு, பழங்கள், குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். அருகில் வழக்கறிஞர் முத்துக்குமார் உள்பட பலர் உள்ளனர்.
Next Story