நான் முதல்வன் திட்டத்தில் 4,200 மாணவர்கள் பயன்: கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை ஊக்குவித்து படிப்பு, அறிவில், சிந்தனை, ஆற்றலில் அவர்களது திறமையை மேம்படுத்தி உயரிய தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் பொருட்டு நான் முதல்வன் எனும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தியது. ஒவ்வொரு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
முதல்-அமைச்சரின் கனவுத் திட்டமான இந்த திட்டத்தின் மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரை இத்திட்டத்தின் மூலம் 4,200 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.