சிவகாசியில் 43 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்

சிவகாசியில்  43 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்
பைல் படம் 
சிவகாசி பட்டாசு ஆலையில் பணிபுரியும் போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 43 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கடந்த மே 9-ம் தேதி சுதர்சன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விதிமுறை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 29-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு குழு உறுப்பினர் கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வரும் 13ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, இருபதாம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மற்றும் 31ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போர்மேன் மற்றும் தொழிலாளருக்கு பயிற்சி நடைபெற உள்ளதாக சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதில் பயிற்சிக்கு வராத பட்டாசு தொழிற்சாலை போர்மேனுக்கு, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி மையத்திலிருந்து அஞ்சல் மூலமாக தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.முதல் முறை அழைத்து வராதவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இரண்டாவது முறை அழைப்பு விடுத்து வராதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்றாவது முறை அழைத்து வராதவர்களுக்கு உரிமம் ரத்து செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story