432 குடியிருப்புகள் கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது

432 குடியிருப்புகள் கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது
X
பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் 432 குடியிருப்புகள் கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கீரனூர் அண்ணா நகர் திட்டப்பகுதியில் 57 கோடி மதிப்பீட்டில் 432 குடியிருப்புகள் கட்டுவதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மத்திய ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் தலைமையில் அப்பகுதியில் பூமி பூஜை செய்யப்பட்டது. பணிகள் விரைவில் அண்ணா நகர் துவங்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி பேரூராட்சி தலைவர் கருப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story