437 மனுக்கள் குவிந்தன

X
கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களை பெற்றார்.வருவாய் துறை, வேளாண்மை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
Next Story

