நாகையில் 44 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - எஸ்பி
எஸ்பி ஹர்ஸ் சிங்
நாகை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஸ் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாகை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 44 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்ற 116 பேர் கைது செய்யப்பட்டு 695 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2899 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1 லட்சத்து 58 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லாட்டரி விற்ற 115 கைது சூதாட்டம் 474 கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றம் மூலம் 1763 தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மணல் கடத்தல் 19 பேர் கைது , 13 டிராக்டர்கள், விதியை மீறி வாகனங்கள் இயக்கிய 67283வழக்குகள் பதியப்பட்டுள்ளது ரூ63,65,000 அபராத தொகை பெறப்பட்டுள்ளது விபச்சாரவழக்கில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 2022, 134 பேர் விபத்து 2023 130 பேர் இறந்துள்ளனர். 11 சதவீத குறைவு. புத்தாண்டை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். இவ்வாறு தனது பேட்டியில் கூறினார்.