மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனு

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனு

 திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 

திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (04.12.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 442 மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று. வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, மற்றும் உபகரணங்கள். சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள் புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 442 மனுக்கள் பெறப்பட்டது. மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டு பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி இன்று ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 29 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைந்திட ஏதுவாக உலக வங்கி நிதி உதவியுடன் Rights திட்டம் செயல்படுத்திடும் பொருட்டு மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டும் மற்றும் கையெழுத்து இடும் பேரணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.முருகேஷ் துவக்கிவைத்தார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் தே.தீபசித்ரா, இணை இயக்குநர் வேளாண்மை அரக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, பழங்குடி நல அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story