"443 இருளர் வீடு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு"
கட்டுமான பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில், விப்பேடு, ஊத்துக்காடு, சிங்காடிவாக்கம், காட்ராம்பாக்கம் ஆகிய நான்கு இடங்களில், 19.3 கோடி ரூபாய் மதிப்பில், இருளர் பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை பணிகளும் நடைபெறுகின்றன. இப்பணிகளை சமீபத்தில் பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, சிங்காடிவாக்கத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மின் இணைப்பு வழங்குவது, குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி, மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார்.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் வட்டார தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.