45 கிலோ கஞ்சா பறிமுதல்
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பிரபல தனியார் கல்லூரி அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றி திரிவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அந்த நபர்களை மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்து பார்த்த போது அதில் சிறு, சிறு பொட்டலகங்களாக சுமார் 45 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் திருவள்ளூரை சேர்ந்த பூஞ்சோலை(37), முகுந்தன்(24), என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம், இராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதனை சிறு, சிறு பொட்டலங்காக பிரித்து சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.