சாராயம் காய்ச்ச வைத்திருந்த 450 கி வெல்லம் பறிமுதல்

சாராயம் காய்ச்ச  வைத்திருந்த 450 கி வெல்லம் பறிமுதல்

வெல்லம் பறிமுதல் 

பேரணாம்பட்டு அருகே சாராயம் காய்ச்சுவதற்காக கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு கடைகளில் வெல்லம் விற்கப்படுவதாக வேலூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் எஸ்பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், ராஜசேகரன் மற்றும் சிறப்புப் படை போலீசார் பேரணாம்பட்டில் பஜார் வீதி, எம்.எம். ரோடு உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது கமலாபுரம் கிராமத்தை சேர்ந்த பழனி (58) என்பவர் மளிகை கடையில் 11 மூட்டைகளில் தலா 25 கிலோ, அர்ஷத் (40) என்பவருடைய மளிகை கடையில் 7 மூட்டைகளில் தலா 25 கிலோ வெல்லம் என மொத்தம் 450 கிலோ எடையுள்ள வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சாராயம் காய்ச்சும் கும்பலுக்கு வெல்லத்தை விற்க வைத்திருந்து தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story