ஏற்காட்டில் 47-வது கோடை விழா- மலர் கண்காட்சி !!!

ஏற்காட்டில் 47-வது கோடை விழா- மலர் கண்காட்சி !!!

சைக்கிள் போட்டி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா- மலர் கண்காட்சி கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா- மலர் கண்காட்சி கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.அண்ணா பூங்காவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண வண்ண பூக்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்து வருகின்றனர். இதையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தினமும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சியை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக உள்ளனர். இதனால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அந்த வகையில், கோடை விழாவின் 3-வது நாளான நேற்று காலை வனத்துறை சார்பில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசில்லா ஏற்காட்டை உருவாக்கிடும் வகையில் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 34 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த சைக்கிள் போட்டி சுற்றுச்சூழல் பூங்காவில் தொடங்கி ஏற்காடு பஸ் நிலையம், அண்ணா பூங்கா, ஏற்காடு ஏரி வரை சென்று மீண்டும் சுற்றுச்சூழல் பூங்காவை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story