48வது தேசிய அளவிலான சீனியர் வளையப்பந்து போட்டிக்கான பயிற்சி முகாம்

48வது தேசிய அளவிலான சீனியர் வளையப்பந்து போட்டிக்கான பயிற்சி முகாம்
X
48வது தேசிய அளவிலான சீனியர் வளையப்பந்து போட்டிக்கான பயிற்சி முகாம்
48வது தேசிய அளவில் சீனியர் வளையப்பந்து போட்டிகள் ஒரிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஜவர்கலால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 25/03/2025 முதல் 29/03/2025 வரை நடைபெற உள்ளது. இப் போட்டிக்கான ஏற்பாடுகளை தேசிய வளையப்பந்து கழகம் மற்றும் ஒரிசா வளையப்பந்து கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. இப்போட்டிக்கான பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள ஜெம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 13 / 03 / 2025 முதல் 22 / 03 / 2025 வரை தொடர்ச்சியாக பத்து நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சிமுகாமிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டனர். இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வளையப்பந்து கழகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வளையப்பந்து கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் கலந்து கொண்டனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த M.வைரமுத்து, S.கார்த்திக் ராஜா, R. முத்துச்செல்வம், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த E.செந்தமிழன், E.அறிவழகன் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த S.அபிஷேக் ஆகியோர் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த A.ரம்யா, Y.அம்பிகா, D.தக்ஷிதா, S,மேனகா, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த M. அபிநயா, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாஷிகா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர். ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி தங்குவதற்கான அறைகள் தனித்தனியாக வழங்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி தங்குவதற்கான இடம் 100 மீட்டர் தொலைவில் இருந்தது. விளையாட்டு மைதானம் இரண்டு விளையாட்டு மைதானங்கள் சிறப்பான முறையிலும் மற்றும் நேர்த்தியான முறையிலும் அமைக்கப்பட்டு இருந்தது. விளையாட்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வகையில் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் விளையாட்டு மைதானம் இரவிலும் விளையாடக் கூடிய வகையில் இரவு மின்விளக்குகளும் (FLOODLIGHT) அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே பயிற்சி முகாம் காலை மாலை மற்றும் இரவு வரை நடைபெற எதுவாக விளையாட்டு மைதானம் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. பயிற்சியில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் மிகவும் ஆரோக்கியமான முறையிலும், சுகாதாரமனையிலும் சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டிருந்தது. பயிற்சி முகாமில் போட்டியில் பங்கு பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு தனித்தனியாக பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கினர். தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கிய அறிவுரைகளை முறையாக பின்பற்றி சரியான முறையில் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. 48 வது தேசிய அளவிலான சீனியர் வளையப்பந்து போட்டியில் பங்கு பெறும் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை சேர்ந்த அனைவருக்கும் தமிழ்நாடு வளையப்பந்து கழகத்தினுடைய சேர்மன் திரு. M.V.M வேல்முருகன், தலைவர் திரு. சௌபாக்கியா V. வரதராஜன், செயலாளர் திரு. D. சங்கர், பொருளாளர் திரு. K. அனந்த கிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்களும் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட வளையப்பந்து கழகத்தினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story