49 கண்மாயில் நீர் இருந்தும் காட்டு பன்றிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை - விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

49 கண்மாயில் நீர் இருந்தும் காட்டு பன்றிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை - விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
X
49 கண்மாயில் நீர் இருந்தும் காட்டு பன்றிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை - கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வயிற்றில் அடித்து குமுறல்*
அருப்புக்கோட்டை கோட்டத்தில் 49 கண்மாயில் நீர் இருந்தும் காட்டு பன்றிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை - கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வயிற்றில் அடித்து குமுறல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைவிற்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.‌ இந்தக் கூட்டத்தில் திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, பரளச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறை அதிகாரிகள் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.‌ இந்தக் கூட்டத்தில் காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவசாமி பேசுகையில், அருப்புக்கோட்டை கோட்டத்தில் 49 கண்மாயில் நீர் இருந்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. நரிக்குடி பகுதியில் ஒன்பது விவசாயிகளை காட்டு பன்றிகள் தாக்கியுள்ளது அதை வனத்துறை அதிகாரிகளும் வந்து பார்த்தனர்.‌ வனவிலங்குகள் பறவைகளை கணக்கெடுக்கும் அதிகாரிகள் ஏன் காட்டுப்பன்றிகளை கணக்கெடுப்பதில்லை காட்டு பன்றிகளை கணக்கெடுக்க வேண்டும். விவசாயிகளுடன் சேர்ந்து ரோட்டில் படுத்து போராட்டம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என‌ பேசினார். விவசாயி செல்வம் பேசுகையில், அருப்புக்கோட்டை தாலுகா பரளச்சி பகுதியில் கனமழையால் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை சென்ற ஆண்டும் நிவாரணம் வழங்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதேபோல இசலி பஞ்சாயத்து மேலகுமிலங்குளம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளது அதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகளுக்கு மன அழுத்தம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை ‌எனவும் குற்றம் சாட்டினார். கோவிலாங்குளத்தை சேர்ந்த விவசாயி குமார் பேசுகையில், கோவிலாங்குளம் தபசு ஊரணியில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதே போல மற்ற விவசாயிகள் இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது பயிர் நிவாரணம் உரிய முறையில் வழங்கப்படுவது கிடையாது இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இவ்வாறு கூட்டம் நடைபெற்றது.
Next Story