நாகையில் 49 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 49 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பணிபுரியும் நுண் பார்வையாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தேர்தல் இணையதளம் மூலம் பணிகள் ஒதுக்கப்படும் (Randamization) நிகழ்வு நாகப்பட்டினம் பொது தேர்தல் பார்வையாளர் .பி.பாரதி லக்பதி நாயக், தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) எஸ்.டி.சரணப்பா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது 29.நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் 163.நாகப்பட்டினம். 164.கீழ்வேளுர்(தனி) மற்றும் 165.வேதாரண்யம் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தின் 166.திருத்துறைப்பூண்டி(தனி), 168.திருவாரூர். 169 நன்னிலம் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளும் ஆக மொத்தம் 06 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. 163-நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 223 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 164 கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 203 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 165.வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 227 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 49 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. 29 நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள (தனி) பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் பதட்டம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் 49 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர மற்ற வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு பணிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக (micro observers) நியமனம் செய்யப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்களை கணிணி வாயிலாக பிரித்தெடுக்கும் பணி (Randamization) இன்று நடைபெற்றது. இதைப் போலவே, காவல்துறை அலுவலர்களை இம்மாவட்டத்துள்ன 653 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திட பிரித்தெடுக்கும் (Randamization)பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல் தபி.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.