5 தலைமுறைகள் கண்ட ஒரே மாபெரும் இயக்கம் திமுக எம்எல்ஏ பேச்சு
Dindigul King 24x7 |5 Sep 2024 3:06 AM GMT
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் 5 தலைமுறைகள் கண்ட ஒரே மாபெரும் இயக்கம் திமுக. சின்னாளபட்டியில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பழனி MLA பேச்சு
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வண்ணம் கழக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், ஆத்தூர் மேற்கு ஒன்றியம், சின்னாளபட்டி சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம் பேரூர் கழக திமுக சார்பாக கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் சின்னாளபட்டி பேருந்துநிலையம் அருகே உள்ள விஜயமஹாலில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர்காமாட்சி, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், மார்கிரேட்மேரி, பிலால்உசேன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணை தலைவர் ஹேமலதா மணிகண்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் பேசும்போது கொட்டும்மழையில் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக என்ற இயக்கம் ஆலமரம் போல் தளைத்து இன்று விண்ணுயர்ந்து நிற்கிறது. அதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரில் தொடங்கி திராவிட மாடல் எழுச்சி நாயகர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் வருங்கால தமிழகம் உதயநிதி ஸ்டாலின் அவர்களே காரணம். அடிமட்ட தொண்டனுக்கும் பாதுகாப்பாக இருப்பது திமுக என்ற பேரியக்கம் தான் அதனால்தான் இந்த இயக்கம் ஐந்து தலைமுறைகளை கண்டுள்ளது. 2024ம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் எப்படி 40க்கு40 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்து நமது கழகத்தலைவர் கையில் கொடுத்தோமோ அதுபோல வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் மாபெரும் வெற்றிபெற்று வெற்றிக்கனியை அவர் கையில் வழங்க வேண்டும். இதுவே ஒவ்வொரு திமுக தொண்டனின் உறுதி மொழி என கருதி வரும் சட்டமன்ற தொகுதிக்கான பணியை இன்றே தொடங்க வேண்டும். நம்முடன் இணைந்து பணியாற்ற கழகத்தில் மகளிரணியினர் தயாராகி வருகின்றனர். என்றார். இன்றே நாம் சபதம் எடுப்போம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தலைவர் கையில் 200 தொகுதிகளின் வெற்றிக்கனியை கொடுப்போம் என உறுதிமொழி எடுப்போம் என்றார். நிகழ்ச்சியில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் சிவக்குமார், திமுக துணை செயலாளர்கள் பாண்டியன், வசந்த கென்னடி, பொருளாளர் தொப்பம்பட்டி கருப்பையா, மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் காணிக்கைசாமி, பொருளாளர் தேவரப்பன்பட்டி போஸ், துணை செயலாளர்கள் மல்லையாபுரம் சக்திவேல், கருத்தராஜா, கலாபச்சை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பத்மாவதி ராஜகணேஷ், சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், துணை தலைவர் ஆனந்தி பாரதிராஜா, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் அய்யம்பாளையம் ரேகாஐய்யப்பன், சித்தையன் கோட்டை போதும்பொண்ணுமுரளி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வீரக்கல் காங்கேயன், மேற்கு ஒன்றிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வி காங்கேயன். அழகுசரவணன், சாதிக், சிந்தாமணி நாகசுந்தரம், பாப்பாத்தி, வக்கம்பட்டி காணிக்கைராஜ், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகவள்ளி, முத்துமாரிசேகர், பேரூர் கழக செயலாளர்கள் சித்தையன்கோட்டை சக்திவேல், அய்யம்பாளையம் தங்கராஜ், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஜாஹிர்உசேன், ஜீவானந்தம், மற்றும் சின்னாளபட்டி பேரூர் கழக முன்னாள் செயலாளர்கள் துரை, பாலகிருஷ்ணன், அறிவழகன், பேரூர் கழக பொருளாளர் முருகன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய பேருர்கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய சார்புஅணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற இந்நாள் முன்னாள் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கிளைக்கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக பொது உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சின்னாளபட்டி பேரூர்கழக செயலாளர் மோகன்ராஜ் நன்றிகூறினார்.
Next Story