5ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி.

5ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி.
X
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் அஞ்சாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் அஞ்சாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முன்னாள் ஊராட்சி தலைவர் சி.கைலாசம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் ஆரணி எம்.பி, எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு கபடி போட்டியை துவக்கி வைத்தார். மேலும் இதில் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, மேற்குஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய குழு துணை தலைவர் கே.டி.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் இதில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கபடி அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற கபடி அணிக்கு முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூபாய் 15,000 மற்றும் பத்தாயிரம் மதிப்புள்ள கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூபாய் பத்தாயிரம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் 16 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இராட்டிணமங்கலம் விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story