5 கோடி செலவில் மலை கிராமத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணி

5 கோடி செலவில் மலை கிராமத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணி
X
தாண்டிக்குடி அருகே கூடம் நகர் பகுதியில் ரூபாய் 5 கோடி செலவில் மலை கிராமத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம் தங்கள் கோரிக்கை நிறைவேற்றித் தந்த தமிழக அரசுக்கு மலைவாழ் கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை தாண்டிக்குடி மலை கிராமத்தில் உட்கடை கடைசி கிராமமாக அமைந்துள்ளது கூடம் நகர் மலை கிராமம் சுமார் 150 குடும்பத்தினர் அப்பகுதியில் விவசாயம் சார்ந்து வசித்து வருகின்றனர் தாண்டிக்குடியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மலை கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் கடினமான சாலையாகவே இருந்து வருகிறது காப்பி, மிளகு, சௌசௌ, பீன்ஸ் அவரை, மலைவாழை உள்ளிட்டவை 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது மலை உச்சியில் கடைக்கோடியில் அமைந்துள்ள இந்த மலை கிராமத்தில் இருந்து பொதுமக்களும் விவசாயிகளும் பயன்படுத்தும் சாலையான ஜெரோனியம் என்று அழைக்கப்படும் இந்த சாலையை சீரமைத்து தரப்பட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் இடம் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் பண்ணைக்காடு சாலை பிரிவிலிருந்து கூடம் நகர் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் சாலை ரூபாய் 5 கோடியில் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கொடைக்கானல் கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பங்கேற்று அடிக்கல் நாட்டி சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.
Next Story