5 டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளக்கோவிலில் 5 டன் முருங்கைக்காய் கொள்முதல்
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் முருங்கைக்காய்கள் அறுவடை செய்யப்பட்டு, வெள்ளகோவில்-முத்தூர் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும், தனியார் கொள்முதல் மையத்துக்கு விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று, விவசாயிகள் 5 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இங்கு மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் கிலோ ரூ.6-க்கும், கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.9- க்கும் விற்பனையானது.
Next Story