5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

குமாரபாளையம் அருகே 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் தனியார் விடுதியில் வசிப்பவர் பாரத், 23. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.எம். மெடிக்கல் கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார். இதே கடையில், அதே பகுதியை சேர்ந்த மோகனா என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணி வரை பாரத், பணி செய்து விட்டு, விடுதிக்கு சென்று விட்டார். நேற்று காலை, இவரது கடைக்கு அருகில் உள்ள ஓட்டல் கடைக்காரர் போன் செய்து, உங்கள் கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது, என்று கூற, நேரில் வந்து பார்த்த போது, பணம் பத்தாயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் இதன் அருகில் உள்ள பவித்ரா மெஸ், குணா சலூன், லோட்டஸ் டீ கடை, டேஸ்டி கபே ஆகிய கடைகளின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பாரத் , குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story