நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5, 49,443 வாக்காளர்கள் - ஆட்சியர் தகவல்
ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்
நாகை மக்களவைத் தொகுதியில் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்ட பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், நாகை மாவட்டத்தில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 4430 வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். நாகை மாவட்டத்தில் 651 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதில் 49 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றினை சரி செய்ய மத்திய பாதுகாப்பு படை வரவைக்கப்பட்டுள்ளனர்,
மேலும் இவர்களைக் கொண்டு பதட்டமான வாக்குச்சாவடிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது,வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிக்கப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 9 பறக்கும்படி குழு, 9 நிலையான கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ கண்காணிக்கும் குழு ஆகியவை ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். மேலும், நாகை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகளின்படி ரூ. 50000- க்கும் மேற்பட்டு சரியான ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். அனைத்துத் தொகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் இயங்கும்.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 18004257034 மற்றும் கட்டுபாட்டு அறையில் செயல்படும் 04365-252594, 04365-252595, 04365-252599, மற்றும் உங்கள் எஸ் பி யிடம் பேசுங்கள் 8428103090 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில்; இயங்கி வரும் 1950 என்ற இலவச எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.