பண்ணாந்தூர் அருகே 5 பழமையான மணல் பானைகள் கண்டெடுப்பு
கண்டெடுக்கப்பட்ட பழமையான பானைகள்
பணருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள சந்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக ஜேசிபி இந்திரத்தின் மூலமாக பள்ளம் தோன்றி உள்ளனர்.
அப்பொழுது ஒரு கற்படுக்கைக்கு கீழே ஒரு பெரிய சுடுமண் குடுவையும், நான்கு சிறிய சுடுமண் குடுவை என ஐந்து மண்குடுவைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை எடுத்த ஆசிரியர்கள் பள்ளியில் வைத்து விட்டு யாருக்கும் தகவல் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட சுடுமண் குடுவைகளில் புதையல் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள whatsapp குழுக்களில் பரவி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போச்சம்பள்ளி வட்டாட்சியர் மகேந்திரன் பாரூர் வருவாய் ஆய்வாளர் சசிகுமார் புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கர் ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த காம்பௌண்ட் சுவர் கட்டுவதற்கு வெட்டப்பட்ட பள்ளத்தில் மண் பானைகளை உடைந்த நிலையில் இருந்த மண்பானைகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த மண்பானைகளை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் மேலும் அந்த பானையில் ஏதேனும் புதையல் இருந்ததா ஆசிரியர்கள் ஏன் வருவாய்துறை அதிகாரிகளுக்கு மண்ணில் கிடைத்த பொருட்கள் குறித்து எவ்வித தகவலும் அளிக்காமல் இருந்தனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த தகவல் ஆனது தற்பொழுது அந்த கிராம மக்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.