வாலிபரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 காம கொடூரர்கள் கைது

வாலிபரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 காம கொடூரர்கள் கைது

வாலிபரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 கைது

திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி நைட்டி அணிவித்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ரவுடி பாட்டில் மணி கூட்டாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் காளிராஜ் (வயது24,). இவரது நண்பரின் தம்பி விபத்தில் சிக்கி காயமடைந்ததால் திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் இவரை பார்த்து விட்டு காளீஸ்வரன் அந்த மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் திருச்சி செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது டூவீலரில் வந்த வாலிபர், வினோத்திடம் தனது பெயரை திருவெறும்பூர் வசந்த்(24) என அறிமுகப்படுத்தி கொண்டு, தானும் திருச்சி செல்வதாகக் கூறி ஏற்றிச் சென்றார். பின்னர் இருங்களூர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டுக்கு அவரை அழைத்து சென்றார். அங்கு கஞ்சா, மதுபோதையில் இருந்த திருவானைக்கோவில் கவியரசன் (வயது 19), யுவராஜ்(22), அய்யனார் (20) மற்றும் துவாக்குடியைச் சேர்ந்த ரவி போஸ்கோ (28) ஆகியோர் ஓரின சேர்க்கையில் ஈடுபடும்படி வினோத்தை கட்டாயப்படுத்தி உள்ளனர். அதற்கு மறுக்கவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஆயுதங்களால் வினோத்தை தாக்கினர். தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்து சென்று, நிர்வாணமாக்கி, சேலை மற்றும் நைட்டி கட்டச் சொல்லி 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை விடியோ எடுத்துள்ளனர். மேலும் வினோத் வைத்திருந்த செல்போன், ₹1,100 பறித்து கொண்ட அந்த கும்பல், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். பின்னர் வசந்த் தனது டூவீலரில் வினோத்தை ஏற்றி சென்று திருச்சி மெயின் ரோட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றார். வினோத் அளித்த புகாரின்படி திருச்சி போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் பிரபல ரவுடி பாட்டில் மணியின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பிக்க முயற்சித்த வசந்த், ரவி போஸ்கோ ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது . இவர்கள் மிக கொடூரமான முறையில் அட்ராசிட்டி செய்து வந்ததுடன் வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் . திருநங்கை ஒருவரை பிடித்து அடித்து பாலியில் துன்புறுத்தலில் ஈடுபட்ட வீடியோவையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர் .

Tags

Next Story