திமிங்கல உமிழ் நீரை விற்க முயன்ற 5 போ் கைது

திமிங்கல உமிழ் நீரை விற்க முயன்ற 5 போ் கைது

 கைது

திமிங்கல உமிழ்நீரைக் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 5 பேரை திருச்சியில் வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மிளகுப்பாறை பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் முகாமிட்டு சிலா் வன உயிரினங்கள் தொடா்புடைய ரகசியப் பொருளை விற்பதாக வனத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதன்கிழமை இரவு அப்பகுதியில் திருச்சி வனச்சரக அலுவலா் குழுவினா் அதிரடிச் சோதனை செய்தனா். அதில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கல்லணை பா.காா்த்திக், (36) , அ. வடிவேலன் (42) , கோவில்பட்டி வீ. சண்முகப் பிரியன் (38), தென்காசி மாவட்டம் பாலூா்சத்திரம் ச.குமாா், கடையநல்லூா் வட்டம் குணராமநல்லூா் வி. ஜெயபால் ஞானசிங் ஆகியோா் 19.200 கி.கிராம் எடையுள்ள (கட்டி வடிவ) திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனச்சரங்க அலுவலா்கள் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் கடந்த இரு ஆண்டுகளாக இதுபோல திமிங்கல உமிழ்நீரை விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து தடைசெய்யப்பட்ட வன உயிரினப் பொருளை விற்ற 5 பேரையும் வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து, திருச்சி மாவட்ட 2 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்

Tags

Next Story