தென்காசி அருகே 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது !

தென்காசி அருகே 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது !

கைது 

தென்காசி மாவட்டம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி மற்றும் அச்சன்புதூா் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உள்ளாரைச் சோ்ந்த காா்த்திக்(23), தூத்துக்குடியை சோ்ந்த முத்துகல்யாணி(22), சிந்தாமணிபேரிப் புதூரை சோ்ந்த கலைச்செல்வன்(19) ஆகியோா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூரை சோ்ந்த பீா்முகமது(52) மற்றும் புளியங்குடி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாருகாபுரம் மணிகண்டன்(40) ஆகிய 5 பேரை தமிழ்நாடு குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோா் உத்தரவிட்டாா். இதையடுத்து 5 பேரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story