5 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து

5 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து

மார்த்தாண்டம் அருகே பள்ளி வாகனங்களை சோதனை செய்த அதிகாரிகள், முறையாக பராமரிக்கப்படாத ஐந்து வாகனங்களில் உரிமத்தை ரத்து செய்தனர்.


மார்த்தாண்டம் அருகே பள்ளி வாகனங்களை சோதனை செய்த அதிகாரிகள், முறையாக பராமரிக்கப்படாத ஐந்து வாகனங்களில் உரிமத்தை ரத்து செய்தனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா என்று ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.இதேபோல குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உட்பட்ட பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது குறித்த ஆய்வு கோழிப்போர்விளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்தது. பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் தமிழரசி தலைமையில் நடந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர் ராஜேஷ், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன்.தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி வாகனங் களில் கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு கருவி போன்ற 22 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என சோதனையிட்ட அதிகாரிகள், படிக்கட்டு, அவசர கால வழிகதவு ஆகியவற்றின் அகலம் மற்றும் உயரம் பள்ளிக் குழந்தைகள் எளிதாக ஏறி இறங்கும் வகை யில் உள்ளதா என் டேப் மூலம் அளந்து பார்த்தனர். தீயணைப்பு வீரர்கள் பள்ளி வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.மேலும் ஆய்வின்போது 45 வாகனங்கள் சீரமைப்புக்காக திருப்பி அனுப்பப்பட் டன. 5 வாகனங்கள் முறையாக பராமரிக்காமலும், பாதுகாப்பு அம்சங்கள் இல் லாமலும் இருந்தது கண்டுபி டிக்கப்பட்டு அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

Tags

Next Story