விழுப்புரத்தில் கல்வி கடன் முகாம்
கல்வி கடன் முகாம்
விழுப்புரத்தில் நடந்த கல்விக்கடன் முகாமில் 98 பேருக்கு ரூ.5% கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி அலுவலர் ராஜேஸ்வரன், விழுப்புரம் ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ரவிக்குமார், கனரா வங்கி கிளை மேலாளர் சுதிர் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சுனில், சென்ட்ரல் வங்கி கிளை மேலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவ- மாணவிக ளின் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான 98 பேருக்கு ரூ.5 கோடியே 35 லட்சம் கடனுதவிக்கான ஆணையை கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய்நாராயணன் வழங்கினார். அப் போது கல்விக்கடன் பெறும் மாணவ- மாணவிகள் நல்லமுறையில் உயர்கல்வி படித்து வாழ்க்கையில் சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதேநேரத்தில் வங்கிகளில் வாங்கிய கடனுதவியை குறித்த நேரத்தில் அடைக்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார். மேலும் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்த மற்ற மாணவ- மாணவிகளின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு விரைவில் கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story