சொத்துவரியை முன்கூட்டியே செலுத்தினால் 5% ஊக்கத்தொகை - செயல் அலுவலர்

சொத்துவரியை முன்கூட்டியே செலுத்தினால் 5% ஊக்கத்தொகை -  செயல் அலுவலர்

பைல் படம் 

பாபநாசம் பேரூராட்சியில் அரையாண்டிற்கான சொத்து வரியினை முன்கூட்டியே செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அளிக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் பேரூராட்சியில் அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ. 5ஆயிரம் வரை அளிக்கப்படும் செயல் அலுவலர் தகவல் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டு ஆரம்ப தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அந்தந்த அரையாண்டுருக்கான சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5ஆயிரம் வரை அளிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தற்போது முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்த ஏப்ரல் 30ஆம் தேதி இறுதி நாள் ஆகும் மேலும் பேரூராட்சி செலுத்த வேண்டிய வரி இனங்களை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது பாபநாசம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story