வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 5 கிலோ கஞ்சா - வடமாநில தொழிலாளர்கள் கைது
சமிராபகிரா ,சஹில்
அவிநாசிபாளையம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு ஒடிசா மாநில தொழிலாளர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவிநாசிபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவினாசிபாளையம் காவல்துறையினர் நாச்சிபாளையம் செந்தில் நகர் 2வது வீதியில் வடமாநிலத்தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி உள்ள வீட்டில் சோதனை செய்தபோது அங்கு சுமார் 5 கிலோ எடை உள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமிராபகிரா (25) ,சஹில்(25) ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்...
Next Story