மின்சாரம் பாய்ந்ததில் 5 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

மதுராந்தகம் அருகே இடி தாக்கி மின்சாரம் பாய்ந்ததில் ஐந்து பேர் சிறு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுராந்தகம் அருகே இடி தாக்கி மின்சாரம் பாய்ந்ததில் ஐந்து பேர் சிறு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.. இந்த நிலையில் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தில் கூரை வீட்டின் மீது இடி தாகியதில் மின்சாரம் பாய்ந்து வீட்டில் உள்ளே இருந்த டீவி, மிக்ஸி,கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் வசித்து வந்த கோகுல்,சூர்யா,இந்துஸ்ரீ,தருண், சர்மிளா ஆகிய ஐந்து பேர் லேசான காயம் ஏற்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story