5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : தென்காசி எஸ் பி அதிரடி

5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : தென்காசி எஸ் பி அதிரடி

தென்காசி எஸ் பி

தென்காசியில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : தென்காசி எஸ் பி அதிரடி
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உள்ளாறு பகுதியை சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசித்துரை தலைவனார் கார்த்திக் (வயது 23), தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்துகல்யாணி (வயது 22), சிந்தாமணிபேரிப்புதூர் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் கலைச்செல்வன் (வயது 19) ஆகிய மூன்று நபர்கள், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த முஸ்தபா கனி என்பவரின் மகன் பீர் முகமது (வயது 52) மற்றும் புளியங்குடி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாருகாபுரம் ராமர் பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 40) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. பி. சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே‌. கமல்கிஷோர் உத்தரவின் பேரில் 5 நபர்கள் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story