கரூர் கொலை வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண்
ராமநாதபுரம் ராமர்பாண்டி கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பரமக்குடியில் தேவேந்திர குல அமைப்புகள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர்பாண்டி, கடந்த 2012 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி மதுரை அருகே புளியங்குளத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் சிலர் உயிரிழந்தனர்.
இவ்வழக்கில் ராமர்பாண்டி, உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ராமர்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே டூவீலரில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யபட்டார். ராமர்பாண்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரியும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் தேவேந்திர குல அமைப்புகள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட முன்றனர்.
தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாகநாதபுரம் சண்முக பாண்டியன், பொன்னையாபுரம் ராஜபாண்டியன், நாகநாதபுரம் மணிகண்டன், பரமக்குடி சி.ராஜையா, மகாலிங்கம் பெருமாள் வேந்தன், மணிபுரம் ஜெயபாண்டி, இந்திரா நகர் யோபு ராஜ், முகவை உலகுராஜ், பார்த்திபனூர் வேல்முருகன், ஜெயக்குடி மற்றும் தேவேந்திர குல பொது மக்கள் கலந்து கொண்டனர்.